ஆயுர்வேத நிலையம் சுற்றிவளைப்பு!

விஜயசூரியகந்த  - பசியால பகுதியில் இயங்கிவந்த போலி  ஆயுர்வேத நிலையமொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளதுடன் அதனை நடாத்தி சென்ற  போலி  ஆயுர்வேத  வைத்தியரொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது  ஒரு இலட்சம்  ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதை  மாத்திரைகள் மற்றும்  மருந்து  பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.  
இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை நேற்று முன்தினம்  12 மணியளவில்  வீரகுல பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற  தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இந்த சுற்றிவளைப்பின் போது    பமுணுவவத்த , மீரிகம  பகுதியை சேர்ந்த 59 வயதுடைய  நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.  
சந்தேக நபரை  அத்தனகல்ல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துவதற்கான  நடவடிக்கைகளை   வீரகுல பொலிசார் மேற்கொண்டதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர். 


Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment