நாயொன்றை எரியூட்டியமை தொடர்பில் சந்தேக நபர் கைது!
நீர்கொழும்பு–கொப்பர சந்தியிலுள்ள வீடொன்றில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்றை எரியூட்டி கொன்றமை தொடர்பில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எரிகாயங்களுக்கு உள்ளான குறித்த நாய் இம்மாதம் முதலாம் திகதி உயிரிழந்துள்ளது.
லெப்ரடோ இன நாயொன்றே இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் கூறியுள்ளனர்.
இதேவேளை, நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கைவிரல் அடையாளங்கள் காணப்பட்ட நிலையில் இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இவ்வாறான நிலையிலேயே சம்பவத்துடன் தொடர்புடையவர் என கருதப்படும் 38 வயதுடைய நபர் ஒருவர் நீர்கொழும்பு பெரியமுல்ல பகுதியில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
0 comments:
Post a Comment