யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் குமரப்பா, புலேந்திரன் உள்ளிட்ட 12 போராளிகளுக்கான நினைவுத் தூபி அமைப்பது தொடர்பான விவாதத்தால் இன்றைய சபை அமர்வில் குழப்ப நிலை ஏற்பட்டது.
விடுதலைப் புலிகளுக்கு மட்டுமல்லாது மாற்று இயக்கங்களுக்கும் சேர்த்தே நினைவுத் தூபி அமைக்க வேண்டும் என்று சில உறுப்பினர்கள் முரண்பட்டனர்.
வல்வெட்டித்துறை நகர சபையின் அமர்வு இன்று காலை இடம்பெற்றது. அதில் சிலை அமைப்பது தொடர்பான விவாதம் நடந்தது.
உறுப்பினர்கள் மாற்றுக் கருத்துக்களைத் தெரிவித்தமையால் சபையில் குழப்ப நிலை ஏற்பட்டது. சபை தற்போது 15 நிமிடங்களுக்கு ஒத்தியும் வைக்கப்பட்டது.
கடந்த சில மாதங்களுக்கு முன் குறித்த நினைவுத் தூபி சேதமாக்கப்பட்டிருந்தது.
தூபியை மீள அமைக்க முற்பட்ட போதே குழப்பம் ஏற்பட்டது.
0 comments:
Post a Comment