சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட ஒரு தொகை சிகரட்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு – புதுக்கடைப் பகுதியை சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் சுங்க அதிகாரிகளால் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடமிருந்து 29 லட்சம் ரூபா பெறுமதியான 53 ஆயிரத்து 460 சிகரட்டுக்கள் கைப்பற்றப்பட்டதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments:
Post a Comment