ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் தானும் இணைந்து தீர்மானித்து அறிவிக்கும் வரை, ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் எவரும் பேசக்கூடாதென எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மைத்திரி- மஹிந்த கூட்டணியில் எழுந்துள்ள ஜனாதிபதி வேட்பாளர் குறித்த சர்ச்சை தொடர்பில் நேற்று ஊடகங்கள் கேள்வி எழுப்பியபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பதை விரைவில் அறிவிப்போம். அதுவரை எவ்வித அறிக்கைகளையும், கருத்துக்களையும் கட்சி உறுப்பினர்கள் வெளியிட கூடாதெனவும் மஹிந்த கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் சுதந்திர கட்சி உறுப்பினர்களும், பொதுஜன பெரமுன உறுப்பினர்களும் வேறுபட்ட கருத்துக்களை அண்மைகாலமாக வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment