தரச்சான்றுகள் பெற்ற 164 குடிநீர் விநியோக நிறுவனங்கள் தங்களது பதிவை உறுதிப்படுத்தியுள்ள போதும், ஏனைய எந்தவொரு நிறுவனமும் பதிவை உறுதி செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குழாய்க் கிணறுகளை அமைக்கும் 196 தனியார் நிறுவனங்கள் ஆழமான தோண்டுதல் பணிகளில் ஈடுபட்டுள்ள போதும், அவற்றில் 13 நிறுவனங்கள் மாத்திரமே அந்த தோண்டுதல் பணிக்கான தகுதி கொண்டவையாக அமைந்துள்ளமை தெரியவந்தள்ளது.
நீர் விநியோக சபையின் கலந்துரையாடல் ஒன்றின்போது இந்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
எனவே, பதிவினை உறுதிப்படுத்தாத நீர் விநியோக நிறுவனங்களுக்கும், குழாய் கிணறு தோண்டும் நிறுவனங்களுக்கும் எதிராக சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment