2019 ஆம் ஆண்டின் முதல் வெளியீடுகள், கடந்த வாரம் 4 ஆம் திகதி வெள்ளிக்கிழமையன்று 'மாணிக், தேவகோட்டை காதல்' ஆகிய படங்களுடன் ஆரம்பமானது. இரண்டு படங்களுமே வந்த அடையாளம் தெரியாமல் போய்விட்டது.
இந்த வாரம் 'பேட்ட, விஸ்வாசம்' என இரண்டு பெரிய படங்களுடன் தொடர்கிறது. அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை எந்த புதுப் படங்களும் வெளியாக வாய்ப்பில்லை. இன்று வெளியான இரண்டு படங்களுமே அடுத்த வாரம் பொங்கல் விடுமுறை தினம் என்பதால் அனைத்துத் தியேட்டர்களிலும் அப்படியே தொடரும்.
அதற்கடுத்த வாரம் குடியரசு தினம் என்பதால் அந்த வாரத்தில் வேண்டுமானால் புதிய படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது. ஜனவரி 26 சனிக்கிழமை என்பதால் ஒரு நாள் முன்னதாக வெள்ளிக்கிழமையே புதிய படங்கள் வெளிவரலாம். எனவே அடுத்த இரண்டு வாரங்களுக்கு புதிய படங்கள் வெளிவராது.
சந்தானம் நடித்துள்ள ”தில்லுக்கு துட்டு” அதர்வா நடித்துள்ள ”பூமராங்” சாருஹாசனின் 'தாதா 87' படங்கள் ஜனவரி 25 வெளியாக வாய்ப்புள்ளது.
0 comments:
Post a Comment