சினிமா பிரபலங்களின் வாரிசுகளும் சினிமாவிலேயே காலம் தள்ள வருவது ஒன்றும் புதிததல்ல. சமீபத்தில் கூட, நடிகர் விஜய் மகன் சஞ்சீவ், ஒரு குறும்படத்தை இயக்கி, அதில் நாயகனாக நடித்துள்ளார். அதையடுத்து, நடிகர் விக்ரம் மகன் துருவ் விக்ரம், இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகும் 'வர்மா' படத்தில் நாயகனாக நடிக்கிறார்.
விஜய், விக்ரம் மகன்களை அடுத்து, தற்போது, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவும், தன்னுடைய மகன் தேவ்வை சினிமா படத்தில் நடிக்க வைக்க ஆர்வமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
சூர்யா - ஜோதிகா தம்பதிக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் உள்ளனர். அவர்களில் தேவ் தான், புதுமுக இயக்குநர் ஒருவர், சிறுவன் மற்றும் நாய்க் குட்டிக்கு இடையே நடக்கும் பாசப் போராட்டத்தை, உருக்கமாக படமெடுக்க திட்டமிட்டுள்ளார்.
அந்தப் படத்தில், சிறுவன் கேரக்டரில் நடிக்க வைக்க சூர்யா மகன் தேவ்வை படக் குழு அணுகி ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக, முறையான அறிவிப்பு தயாரிப்பாளர் தரப்பில் வெளியிடப்படும் என்கின்றனர்.
0 comments:
Post a Comment