ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டேட்ரே வரவேற்றுள்ளார்.
பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்துகொள்ளவதற்காக 5 நாட்கள் உத்தியோபூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ஜனாதிபதிக்கு இன்று அந்நாட்டு ஜனாதிபதியால் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அரசியல், பொருளாதார, விவசாய, கலாசார மற்றும் மக்கள் தொடர்பு உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தப்படவுள்ளதுடன் அந்நாட்டின் ஏனைய அரசியல் தலைவர்களையும் சந்தித்துக்கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment