யாழ்ப்பாணம் அரியாலை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார் என யாழ்ப்பாணம் அரியாலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்தோடு கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடமிருந்து, 5 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை பொலிஸார் மீட்டுள்ளனர்.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அரியாலை பூம்புகார் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய குறித்த இளைஞரை சோதனையிட்டபோதே, அவரது உடமையிலிருந்து ஹெரோயின் போதைப்பொருளை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment