தாய்லாந்தில் சட்டவிரோதமான முறையற்ற மீன்பிடி இடம்பெற்றதால் ஐரோப்பிய ஒன்றியத்தின் சட்டவிரோத மீன்பிடி எச்சரிக்கை பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், சட்டவிரோத, முறையற்ற மீன்பிடி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதில் தாய்லாந்து நல்ல முன்னேற்றம் கண்டுள்ள நிலையிலேயே எச்சரிக்கை பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.
சட்டவிரோத மீன்பிடிக்கு எதிராக போராடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் முன்னுரிமை வழங்கி வருகிறது. அந்தவகையில், இந்த போராட்டத்தில் ஈடுபாடு கொண்ட பங்காளர் ஒருவர் தற்போது இணைந்துக் கொண்டுள்ளமை மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் மீன்வளத்துறை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
உலகின் மூன்றாவது மிகப்பெரிய கடலுணவு ஏற்றுமதியாளராக விளங்கிவரும் தாய்லாந்து மீது அனைத்து கடலுணவு ஏற்றுமதிகளையும் தடை செய்வதாக எச்சரித்து ஐரோப்பிய ஒன்றியம் கடந்த 2015ஆம் ஆண்டு ‘மஞ்சள் அட்டை’ எச்சரிக்கை விடுத்தது.
இதனையடுத்து தாய்லாந்து அதன் மீன்பிடித் துறைக்கான சட்ட அமைப்புமுறையை, அனைத்துலகச் சட்டத்திற்கு இணையாகத் திருத்தி கொண்ட நிலையில் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment