நாடு முழுவதும் பயிர்செய்கைகளை தாக்க ஆரம்பித்துள்ள சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினை நாடவுள்ளதாக விவசாய அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
சேனா படைப்புழுவை ஒழிப்பது தொடர்பில் நேற்யை தினம் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சேனா படைப்புழுவின் மாதிரியை அமெரிக்க பல்கலைக்கழகத்துக்கு அனுப்பியுள்ளதாக தெரிவித்த விவசாய அமைச்சு, நாட்டில் சோளம் பயிர்செய்கையை தாக்கியுள்ள இந்த படைப்புழுவானது சுமார் 100 வகையான பயிர்செய்கைகளையும் தாக்க கூடும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
0 comments:
Post a Comment