தென்னிந்திய நடிகர் சங்க கட்டடம் கட்டி முடிக்கப்பட்ட பிறகுதான் எனது திருமணம் என்பதில் உறுதியாக இருந்தவர் விஷால்.
அதற்கேற்ப தற்போது நடிகர் சங்க கட்டட வேலைகள் முடியும் தருவாயில் இருப்பதால், ஏப்ரல் அல்லது மே மாதம் கட்டட திறப்பு விழா அன்று விஷாலின் திருமணம் நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
ஐதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபரின் மகள் அனிஷாவிற்கும், விஷாலுக்கும் திருமணம் நடைபெறயிருப்பதாக செய்திகள் வெளியாகின. அதை விஷாலும் இன்று(ஜன.,16) உறுதி செய்துள்ளார். விரைவில் திருமண தேதி அறிவிக்கப்பட இருக்கிறது.
விஷால் திருமணம் செய்து கொள்ளயிருக்கும் அனிஷா, தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜூன் ரெட்டி படத்தில் சிறிய வேடத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment