கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள் 150 பேருக்கு நேற்றுக் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் ச.கீதனின் வேண்டுகோளுக்கிணங்க,
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் வவுனியாவை சேர்ந்த மயூரன், நெதர்லாந்தை சேர்ந்த ரகுநாதன் ஆகியோரின் நிதிப்பங்களிப்பில் உபகரணங்கள் வழங்கப்பட்டன.
இதில், வவுனியா மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார், துணை அமைப்பாளர் ராஜன், வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் உறுப்பினர்களான சந்திரபத்மன், பார்த்தீபன் , தமிழ் ஈழ விடுதலை இயக்க கிளிநொச்சி மாவட்ட உறுப்பினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மாணவர்கள், கலந்து கொண்டனர்.
0 comments:
Post a Comment