தெலங்கானா மாநிலத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பிரனாய் என்ற இளைஞர் தனது காதல் மனைவியின் கண்முன்னே வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
பிரனாய் - அம்ருதா ஆகிய இருவரும் பள்ளியில் இருந்தே காதலித்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துகொண்டனர்.
பிரனாய் தாழ்ந்த சாதியை சேர்ந்தவர் என்பதால், அம்ருதாவின் பெற்றோருக்கு இந்த திருமணம் பிடிக்கவில்லை.
இந்த, 5 மாத கர்ப்பிணியாக இருந்த அம்ருதாவின் கன்முன்ணே கடந்த ஆண்டு செப்டம்பர் 14 ஆம் திகதி பிரனாய் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக, அம்ருதாவின் தந்தை மற்றும் கொலையை செய்த குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் நடந்து 5 மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் அம்ருதாவிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுகுறித்து அம்ருதா கூறியதாவது, பிரனாய் என்னை அதிகமாக நேசிக்கிறான், இதனால் மீண்டும் எனக்கு மகனாக பிறந்து என்னுடன் இணைந்துவிட்டார் என கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment