குளியலறையில் யுவதியை படம் பிடித்த விடுதி ஊழியர் கைது!
இந்திய யுவதியொருவர் குளியலறைக்குச் சென்ற வேளையில் அவரை கையடக்கத் தொலைபேசி ஊடாக படம் எடுக்க முயற்சித்த உல்லாச விடுதி ஊழியரொவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியை படமெடுக்கும் போது யுவதியின் சகோதரனிடம் அகப்பட்டு வெல்லவாய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
வட இந்திய யுவதி தனது தந்தை மற்றும் சகோதரன் ஆகியோருடன் இலங்கைக்கு உல்லாசப்பயணிகளாக வந்து வெல்லவாயவிற்கு சென்று அங்குள்ள உல்லாச விடுதியில் தங்கியிருந்துள்ளனர்.
அவ்வேளையில் இந்திய யுவதி குளியலறைக்குச் சென்றுள்ளார். இதனை தருணம் பார்த்திருந்த குறித்த உல்லாச விடுதியின் ஊழியர் மறைந்திருந்து தனது கையடக்கத்தொலைபேசி மூலம் யன்னல் வழியாக படம் எடுக்க முயற்சித்துள்ளார்.
இதனை அவதானித்த இந்திய யுவதியின் சகோதரன் அவ் ஊழியரைப் பிடித்து நையப்புடைத்து விடுதி முகாமையாளருக்கும் அறிவித்து விட்டு அவர் ஊடாக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இந்நிலையில், பொலிசாரினால் கைதுசெய்யப்பட்ட உல்லாச விடுதி ஊழியர் விசாரணைகளின் பின்னர் வெல்லவாய மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவாரென பொலிசார் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment