கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் பேட்ட. ஜனவரி 10 ஆம் திகதியான நேற்று வெளியான இப்படம் ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்று வருகிறது.
பல திரையுலக பிரபலங்களும் பேட்ட படத்தை ஆர்வத்துடன் கண்டுகளித்து வருகிறார்கள்.
தெலுங்கு சூப்பர் ஸ்டார் நடிகரான மகேஷ்பாபுவும் பேட்ட படத்தை பார்த்து ரசித்துள்ளார். அதையடுத்து அவர் தனது டுவிட்டரில், பேட்ட படம் ரஜினி ரசிகர்களுக்காகவே எடுக்கப்பட்ட படம். என்னையும் சேர்த்து தான்.
ஒரே வார்த்தைதான் தலைவா. கார்த்திக் சுப்பராஜ் சிறந்த இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம்போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். மொத்த படக்குழுவுக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.
0 comments:
Post a Comment