பிரபல இயக்குநர் பி.வாசுவின் மகன் ஷக்தி. தொட்டால் பூ மலரும், நினைத்தாலே இனிக்கும், ஆட்டநாயகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனிலும் பங்கேற்றார். இந்நிலையில் ஷக்தி, தன் காரில் சென்னை, சூளைமேடு அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நின்றிருந்த கார் மீது மோதிவிட்டு அங்கிருந்து நிற்காமல் சென்றுவிட்டார்.
அங்கிருந்தவர்கள் ஷக்தி காரை மடக்கி பிடித்து போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து அங்கு வந்த அண்ணாநகர் போலீசார், காரை பறிமுதல் செய்ததோடு, ஷக்தியை அழைத்து போலீஸ் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஷக்தி, குடிபோதையில் ஏதும் காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா.? இல்லை அதிவேகமாக காரை ஓட்டி விபத்து ஏற்படுத்தினாரா.? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment