மறைந்த முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆர் அவர்களின் 102 வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் குன்றத்தூரில் நடைபெற்றது ஸ்ரீபெரும்புதூர் எம்.எல்.ஏ பழனி தலைமையில் நடைபெற்ற விழாவில் அமைச்சர் பெஞ்சமின், முன்னாள் அமைச்சர் வளர்மதி பேசினார்கள்.
இதில் பேசிய வளர்மதி, டி.டி.வி. தினகரனை நாய் என்று அழைத்தார். தற்போது ஸ்டாலின் ராசியான வைகோவுடன் உள்ளார் அவர் வல்லவர் ஸ்டாலினை முதல்வர் ஆக்கி விடுவார். மீதமுள்ள சில்லறை கட்சிகளுடன் கூட்டனி வைத்துள்ளார்.
இரட்டை இலை என்றும் தோற்காது ஆர்.கே நகரில் தோற்றதற்கு காரணம் இந்த நாயை ( டிடிவி தினகரனை) அழைத்துக்கொண்டு இவன் நல்லவன் ஓட்டு போடுங்கள் என்று கூறினோம் அதன்பிறகு இவன் எங்களிடம் இல்லை என்று கூறியவுடன் மக்களுக்கு கோபம் வந்து விட்டது, இல்லை என்றால் உன்னை யாருக்கு தெரியும் என்றும், மருத்துவமனையில் ஜெயலலிதாவை காப்பாற்ற வேண்டும் என்று நினைத்து இருந்தால் அவர் இன்னும் 10 ஆண்டுகள் நன்றாக இருந்து இருப்பார்.
இவர்கள் முதல்வராகவும், கட்சிக்கு தலைவராக வேண்டும் என்பதால் போனால் போகட்டும் என்று விட்டு விட்டனர். 1 1/2 கோடிக்கு இட்லி சாப்பிட்டு உள்ளனர். நாங்கள் யாரும் சாப்பிடவில்லை மருத்துவமனையில் அறையை எடுத்து கூத்து அடித்து விட்டு இருந்தனர் என்று வசை பாடினார்.
Home
News
World News
எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் டிடிவி.தினகரனை நாய் என்று அழைத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி!
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment