கடும் வெப்பம் காரணமாக, வீடுகளின் ஜன்னல்களை இரவு நேரங்களில் திறந்து வைப்போர், அவதானமாகவும், விழிப்புடனும் நடந்துகொள்ளுமாறு, பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் பிரதான நகரப் பகுதிகளில், வீடுகளின் ஜன்னல்களை இரவு நேரங்களில் திறந்து விடுகிறார்கள்.
இதனால், பணம் மற்றும் பெறுமதியான நகைகள் என்பன, அண்மையில் வீடுகளிலிருந்து திருடர்களால் களவாடப்பட்டு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கால நிலையை, வாய்ப்பாகப் பயன்படுத்தி, திருடர்கள் தமது கைவரிசைகளை காட்டி வருகின்றனர்.
தனியாக வீடுகளில் இருப்போர், மிகவும் விழிப்புடன் இருக்குமாறும், குறிப்பாக இரவு நேரங்களில் தனியாக இருப்போர் பாதுகப்புக்கு எவரையாவது வைத்துக்கொள்வது சிறந்ததெனவும், பொலிஸார் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments:
Post a Comment