ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிகிந்தலை வளாகம் எதிர்வரும் 16ஆம் திகதி முதல் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.
அதன்படி மிகிந்தலை வளாகத்தின் அனைத்து பீடங்களும் கல்வி நடவடிக்கைக்காக மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே விடுதியில் தங்கியுள்ள மாணவர்கள் அனைவரும் 15ஆம் திகதி மாலை 4.00 மணிக்கு முன்னர் தமது விடுதிகளுக்கு வருகை தருமாறு பல்கலைக்கழக கட்டுப்பாட்டாளர் கேட்டுள்ளார்.
0 comments:
Post a Comment