போலி நாணயத்தாள்களை பரமாற்றம் செய்ய முற்பட்ட இரு இளைஞர்களைக் கைது செய்துள்ளதாக யாழ்.சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாணம், கைதடி சந்தியில் வைத்து இன்று அதிகாலை வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயதுடைய இரு இளைஞர்கள் இவ்வாறு கைதுசெய்யப்பட்டனர்.
5 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய 20 நாணயத்தாள்களை வேறு ஒருவருக்கு கைமாற்ற முற்பட்டவேளை புலனாய்வு பிரிவு பொலிஸாரினால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களும் சாவகச்சேரி பொலிஸாரிடம் மேலதிக விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
0 comments:
Post a Comment