நல்லாட்சி அரசாங்கத்தில் அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் குறித்து ஆராய ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரி பாலசிறிசேனவின் உத்தரவிற்கமைய கடந்த 2015 ஜனவரி 14 முதல் 2018 டிசம்பர் 31 வரை அரச நிறுவனங்களில் இடம்பெற்றதாக கூறப்படும் மோசடிகள் குறித்து விசாரிக்க இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆணைக்குழுவிற்கு தலைவராக ஓய்வுபெற்ற நீதியரசர் உபாலி அபேரத்ன நியமிக்கப்பட்டுள்ளதுடன் சரோஜினி வீரவர்தன, எல்.ஆர்.டி.சில்வா மற்றும் கே.ஏ.பிரேமதிலக, விஜே அமரசிங்க ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment