பல மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் வைத்தே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்டர்களில் அமெரிக்க பிரஜைகள் இருவரும், ஆப்கானிஸ்தான் பிரஜையொருவரும் அடங்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேகநபர்களிடமிருந்து ஆயிரத்து 80 மில்லியன் ரூபா பெறுமதியான 100 கிலோ கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்தாகவும் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
பொலிஸ் அதிரடிப்படையினரும், பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரும் இணைந்தே இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.
0 comments:
Post a Comment