யாழ்ப்பாணம் தென்மராட்சி பொது அமைப்புகளும், சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றமும் இணைந்து நடாத்திய பொங்கல் விழா தென்மராட்சி கலைமன்ற கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.
சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்ற உப தலைவர் வ.ஸ்ரீபிரகாஸ் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வில் மாகாண தமிழ்த் தினப் போட்டியில் முதலிடம் பெற்ற சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவிகளின் காளிங்க நர்த்தனம் நாட்டியாஞ்சலி இடம்பெற்றது.
தென்மராட்சி இலக்கிய அணியின் “ஏற்றமிகு எம் தமிழர் பண்பாடு இன்று“ என்னும் தலைப்பிலான பட்டிமண்டபம் நற்றமிழ்வேந்தன் கவிஞர் த.நாகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
அதனையடுத்து இசைச் சங்கமம் நிகழ்வு இடம்பெற்றது.
0 comments:
Post a Comment