செல்லமே படத்தில் 2004 இல் அறிமுகமானவர் விஷால். அந்த வகையில் அவரது 25வது படமாக சண்டக்கோழி-2 வெளியானது. அதையடுத்து அயோக்யா படத்தில் நடித்து வருபவர், அடுத்தபடியாக சுந்தர்.சி இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
விஷாலின் தாய்மொழி தெலுங்கு என்றாலும் இதுவரை அவர் நேரடி தெலுங்கு படத்தில் நடித்ததில்லை. தமிழில் அவர் நடித்த படங்கள் தான் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியாகி வந்துள்ளன.
இந்நிலையில், தெலுங்கில் முதன்முறையாக தேஜா இயக்கும் படத்தில், அவர் நேரடியாக நடிக்கப்போகிறார். சுந்தர்.சி படத்தை முடித்ததும் தெலுங்கு படத்தில் விஷால் நடிக்கயிருப்பதாக என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
0 comments:
Post a Comment