நுவரெலியா- ஹற்றன் பகுதியில் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியினை அபகரித்துச் சென்ற சந்தேகநபரை பொதுமக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து பிடித்துள்ளனர்.
நேற்று இடம்பெற்ற இச்சம்பவத்தில் நோர்வூட் பிரதேச சபையில் பணிபுரியும் பெண்ணொருவரின் தங்கச் சங்கிலியினையே சந்தேகநபர் அபகரித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த பெண் தமது கடமைகளை நிறைவுசெய்துகொண்டு வீடு திரும்பியபோது, சந்தேகநபர் அவரை பின்தொடர்ந்து வந்து தங்கச்சங்கிலியினை அபகரித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து அப்பெண் கூச்சலிட ஹற்றன் டிக்கோயா நகரசபையின் பாதுகாவலர், பிரதேசவாசிகள் மற்றும் பொலிஸார் அவ்விடத்திற்கு விரைந்து வந்து சந்தேகநபரை பிடித்துள்ளனர்.
பின்னர் தங்கச்சங்கிலியை மீட்ட பொலிஸார், சந்தேகநபரை கைது செய்து மேலதிக விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த தங்கச்சங்கிலியினை பறிக்கும்போது, அப்பெண்ணின் கழுத்தில் சிறிய காயங்களும் ஏற்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் பத்தனை பிரதேசத்தை சேர்ந்த 31 வயதுடையவர் என்றும் அவர் கொழும்பு பகுதியில் தரகர் பணியில் ஈடுபட்டுள்ளவர் என்றும் ஹற்றன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில் சந்தேகநபரை, ஹற்றன் நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்துவதற்கான ஏற்பாடுகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment