பாகிஸ்தானை சேர்ந்த ஓரினச்சேர்க்கையாளர்களான இரண்டு இளம் பெண்கள் திருமணம் செய்து கொண்டு வீட்டை விட்டு ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லாகூரை சேர்ந்தவர் சோபியா. இவர் தோழி சிஷா. சோபியாவும், சிஷாவும் தோழிகள் என்பதை மீறி உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் சோபியாவும், சிஷாவும் வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாகியுள்ளனர்.
இதையடுத்து சோபியாவின் தாய் பொலிசில் புகார் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், என் மகள் அடிக்கடி என்னிடம், சிஷாவை நான் காதலிக்கிறேன், விரைவில் திருமணம் செய்து கொள்வேன் என கூறினார்.
எங்களை யாராவது பிரிக்க நினைத்தால் சுட்டு கொன்றுவிடுவேன் எனவும் மிரட்டினார்.
இருவரும் இரவில் கூட ஒன்றாக தான் தங்குவார்கள்.
என் மகளை கண்டுப்பிடித்து தருமாறு பொலிசாரிடம் புகார் கொடுத்தால் அவர்கள் எங்களையே மிரட்டுகிறார்கள் என கூறியுள்ளார்.
பொலிசார் வேண்டுமென்றே சோபியாவையும், சிஷாவை காப்பாற்றுகிறார்கள் என ஊர் மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
0 comments:
Post a Comment