இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட ஒருவர் அம்பேத்கர் சிலைக்கு குளிராமல் இருக்க, போர்வை போத்தி, தலைக்குக் குல்லா அணிவித்து, வெதுவெதுப்பாக இருக்க சிலைக்கு முன் நெருப்பு மூட்டி மக்களை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது அம்பேத்கர் சிலை முழுதாக மூடி இருந்ததை கண்ட அத்தெரு மக்கள் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து விசாரணை நடத்திய பொலிஸார் அவ்வாறு செய்த நபரை பிடித்து விசாரித்ததில் 'எனக்கு அதிகமாக குளிர் எடுத்தது, அம்பேத்கருக்கும் என்னைப் போல் குளிரும் என்பதால் போர்வை போற்றி, சிலைக்கு முன் தீ மூட்டி வைத்தேன்,' என்று அந் நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அவர் ஒரு மன நலம் குன்றியவர் என்று அறிந்த பொலிஸார் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment