இந்தியாவில், ஜம்மு-வை சேர்ந்த உடற்பயிற்சி ஆலோசகர் ஒருவர் 10 நாட்களுக்கு முன்பு அவரது ஸ்மார்ட்போனில் பப்ஜி என்ற விளையாட்டை இன்ஸ்டால் செய்து உள்ளார்.
முதல்முறையாக விளையாடிய அவருக்கு அந்த விளையாட்டு மிகவும் பிடித்து விட்டது. எனவே கடந்த பத்து நாள்களாக ஓய்வு இல்லாமல் விளையாடி உள்ளார். இதில் மனநலம் பாதிக்கப்பட்ட அவர், தன்னை தானே தாக்கி கொண்டுள்ளார்.
இதை தொடர்ந்து அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
பப்ஜி விளையாட்டு பிரச்சனைக்கு ஆளாகும் சம்பவம் ஐம்முவில் முதல் முறை இல்லை என்றும், அந்த விளையாட்டை தடை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment