நாங்கள் வேண்டி நிற்பது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு அரசியலமைப்பினூடாக வரவேண்டும் என்பதையே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியலமைப்பை மீறி மத்தி தலையிட்டால் நாம் என்ன செய்வோம் எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வரவேற்கும் நிகழ்வு நேற்று மாலை வடமராட்சி பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரில் இடம்பெற்றுள்ளது.
இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,
செய்திகளை பிரசுரிக்கும் பொழுது உண்மைகளை மட்டுமே பிரசுரிக்க வேண்டுமே ஒழிய பொய்களை பிரசுரிக்க வேண்டாம் எனவும் மக்களை குழப்பு வகையில் ஊடகங்கள் செயற்படக் கூடாது என்பதையும் கடுமையான தொனியுடன் சுமந்திரன் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
நல்ல எதிர்காலத்தை கட்டியெழுப்ப வேண்டியது அனைவரின் கடமையாகும் எனவும் தெரிவித்திருந்தார்.
சுமந்திரனின் பேச்சானது தென்னிலங்கையின் பல அரசியல்வாதிகளை சவாலுக்கிட்டு இருக்கின்றது.
இந்த பேச்சானது தென்னிலங்கை அரசியல்வாதிகள் மற்றும் பலருக்கு சற்று தடுமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment