பொங்கல் பண்டிகையை ஒட்டி அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், வெளியூர் செல்வோருக்கு வசதியாக, சென்னையில் 30 முன்பதிவு மையங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
பொங்கலையொட்டி, ஜனவரி 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 24 ஆயிரத்து 708 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னையில் இருந்து 14 ஆயிரத்து 263 பேருந்துகள் இயக்கப்படுவதால், அவற்றில் முன்பதிவு செய்வதற்கு வசதியாக மையங்கள் இன்று திறக்கப்படுகின்றன.
கோயம்பேட்டில் 26 கவுண்ட்டர்களும், தாம்பரம் சானிடோரியத்தில் இரண்டு கவுண்ட்டர்களும், பூந்தமல்லி, மாதவரம் ஆகிய இடங்களில் தலா ஒன்று என 30 சிறப்பு முன்பதிவு மையங்கள் இன்று முதல் செயல்படும். பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசு சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு தொடங்கியது
சென்னை கோயம்பேட்டில் பொங்கல் பண்டிகை பேருந்துகளுக்கான முன்பதிவு சிறப்பு கவுண்ட்டர்களை போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.
0 comments:
Post a Comment