பிரதமர் நரேந்திர மோடி, வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டு தலைவர்களினால் வழங்கப்பட்ட பரிசுப்பொருட்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி, கடந்த நான்கரை ஆண்டுகள் வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கிடைக்கப்பெற்ற பரிசுப்பொருட்களே ஏலத்தில் விடப்ப டுகிறது.
டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் இன்றும் நாளையும் குறித்த பரிசுப் பொருட்கள் ஏலத்தில் விடுவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய கலாசார துறை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
ஓவியங்கள், சிற்பங்கள், இசைக் கருவிகள், சால்வைகள் என சுமார் 1,900 பொருட்கள் ஏலத்தில் விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment