அக்காவிற்கு சிறுநீரகத்தை தானம் செய்ய புகைப்பிடித்தலை கைவிட்ட தங்கை

மனிதா்கள்  தமது வாழ்க்கையில் சில பழக்க வழக்கங்களை கைவிட முடியாதவா்கள். ஏதாவது ஒன்றுக்கு அவா்கள்   பழக்கப்பட்டவா்களாகவே இருப்பா். ஆனால் கனடாவில் தன் சகோதாி ஒருவருக்காக தன் பழக்கமான செயற்பாடொன்றை கைவிட்டு செயற்பட்டுள்ளமை அனைவருக்கும் முன்மாதிாிகையாக உள்ளது.

தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஒரு எதிர்பார்ப்போடேயே செலவிட்டிருந்தார் கனடாவைச் சேர்ந்த Lexie (28). ஒரு அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்த Lexieயின் சிறுநீரகங்கள் பழுதாகிவிட்ட நிலையில், யாராவது தனக்கு சிறுநீரகம் ஒன்றை தானமாக தருவதற்காக காத்திருந்தார் அவர். 

அவரது உறவினர்களில் பெரும்பாலானோர் அவருக்கு தானம் செய்ய முன்வந்தும், அவர்களில் ஒருவரது சிறுநீரகமும் அவருக்கு பொருந்தவில்லை. இந்நிலையில் Lexieயின் தங்கையான Emma(21) வுக்கும் தனது அக்காவுக்கு உதவ வேண்டும் என்று ஆசை இருந்தது. ஆனால் 18 வயதுக்கு முன் தானம் செய்ய முடியாது என்பதால், அவரும் காத்திருந்தார். 

பின்னர் 18 வயதான போது அவர், தானம் செய்வதற்கு முந்தைய பரிசோதனைகளுக்காக செல்ல, அவருக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது சிறுநீரகம் Lexieக்கு பொருந்தும் என்றாலும், அவருக்கு இரத்த அழுத்தப் பிரச்சினை இருந்ததால், அவரால் தானம் செய்ய முடியாது என்று கூறிவிட்டனர் மருத்துவர்கள். தனது இரத்த அழுத்தப் பிரச்சினைக்கான காரணம் Emma வுக்கு தெரியும், அவர் புகை பிடிக்கும் பழக்கம் உடையவர். 

தனது சிறுநீரகம் அக்காவுக்கு பொருந்திய நிலையிலும், தன்னால் அவருக்கு சிறுநீரகம் கொடுக்க முடியாது என்கிற விடயம் Emmaவை வருத்தத்திற்குள்ளாக்கியது. அன்றே ஒரு முடிவெடுத்தார் Emma. யாரிடமும் சொல்லாமலே புகை பிடிப்பதை விட்டார். 

தனது உடலை நல்ல நிலைக்கு கொண்டு வந்தார். பின்னர் யாரிடமும் சொல்லாமல் மருத்துவமனைக்கு சென்று மீண்டும் பரிசோதனைகள் மேற்கொண்டார். இப்போது அவரது உடல் நல்ல நிலைமையில் இருந்தது, இரத்த அழுத்தம் கட்டுக்குள் இருந்தது.பின்னர்தான் சென்று தன் அக்காவிடம் உண்மையைச் சொன்னார் Emma. மிகவும் மகிழ்ந்தும் நெகிழ்ந்தும் போயிருக்கும் Lexie, Emma தனக்கு மீண்டும் வாழ்க்கை தந்திருக்கிறார் என்கிறார். இம்மாத இறுதியில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை நடைபெற இருக்கிறது. 

தங்கள் கதை சிறுநீரக தானம் செய்வதற்கு மற்றவர்களுக்கும் உத்வேகமளிக்கும் என்று கூறுகிறார்கள் சகோதரிகள்.
Share on Google Plus

About Editor Jeen

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment