களனி கங்கையின் வெள்ளத்தை கட்டுப்படுத்த மணல் வேலி அமைக்க ப்படவுள்ளது. இதற்கென 24 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
வெள்ளம் மற்றும் அடைமழை பெய்யும் வேளைகளில் களனி கங்கை பெறுக்கெ டுப்பதால், களனி கங்கையை சூழவுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
இதன் அடிப்படையிலேயே இந்த திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதேவேளை, களனி கங்கையின் தெற்கு பிரதேசத்திற்கு நீரை வழங்கும் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன்கீழ் கம்பஹா மாவட்ட மக்களுக்கு தேவையான நீர் வியோகம் இடம்பெறும் என்றும், அம்பத்தல நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் நடவடிக்கைகளுக்கு பொறுப் பான முகாமையாளர் பியல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு நகருக்கு புதிய நீர் வியோகத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் முகாமையாளர் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment