மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட புலனாய்வு அமைப்பின் இயக்குநர் அலோக் வர்மா, அப்பதவியை தொடர்வதற்கு உயர் நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.
மத்திய அரசு கட்டாய விடுப்பில் தன்னை அனுப்பியதை எதிர்த்து, இயக்குநர் அலோக் வர்மா உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த வழக்கின் மனுவை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான 3 நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று விசாரணைக்கு உட்படுத்தியது.
இதன்போது நீதிபதிகள் அமர்வு, சி.பி.ஐ இயக்குநர் அலோக் வர்மாவை கட்டாய விடுப்பில் அனுப்பிய அரசின் உத்தரவை ரத்து செய்ததுடன் அலோக் வர்மா தொடர்ந்து சி.பி.ஐ. இயக்குநராக செயற்படுவார் எனவும் உத்தரவு பிறப்பித்தது.
மத்திய புலனாய்வு அமைப்பின் இயக்குநரான அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோருக்கு இடையில் இலஞ்ச ஊழல் முறைப்பாடு தொடர்பில் மோதல் ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து நீக்கி, கட்டாய விடுப்பில் மத்திய அரசு அனுப்பியது.
இந்நிலையிலேயே மத்திய அரசின் குறித்த நடவடிக்கையை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அலோக் வர்மா, மனுவொன்றை தாக்கல் செய்தார்.
0 comments:
Post a Comment