தமிழ் மொழியில் தேர்ச்சி பெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால், நாட்டில் நிலவுகின்ற பல பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு, நேற்று ஊடகவியலாளர்களை சந்தித்த குமார வெல்கம இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறியுள்ளதாவது,
'சிறுபான்மை இனத்தவர்கள் பேசுகின்ற தமிழ் மொழி தொடர்பில், தெளிவுபெற்ற ஒருவர் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட வேண்டியது அவசியமாகும்.
அப்போதுதான், தீர்வில்லாமல் தொடரும் பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டுவர முடியும்.
இதேவேளை நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதே சிறந்ததாகும்.
மேலும் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி கலைத்தமை சட்டவிரோதமானதென நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளமையால் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளையே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொள்ள வேண்டும்' என குமார வெல்கம தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment