கிண்ணியா, மகாவெலி ஆற்றில் குதித்த மூவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மண் அகழ்வுப் பணியில் ஈடுபட்டு வந்த மூவர் மீது நேற்றுத் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து கிண்ணியா கங்கைப் பாலம் பகுதியில் குறித்த இளைஞர்கள் ஆற்றில் பாய்ந்து மூழ்கியுள்ளனர்.
இதில் ஒருவர் தப்பித்துள்ளதுடன் இருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தனர்.
இந்த நிலையிலேயே, ஆற்றில் குதித்த காணமற்போன இருவரில் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
0 comments:
Post a Comment