பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்த சந்திரமுகி படத்தில் ஜோதிகா நடித்த வேடத்தில் முதலில் கமிட்டாகி நடித்தவர் சிம்ரன். ஆனால் மூன்று நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்து கொண்டவர், தான் கர்ப்பமாகியிருப்பதை அறிந்ததும் அந்த படத்தில் தொடர்ந்து நடிக்க முடியாமல் வெளியேறினார்.
அதன்பின்னர்தான் ஜோதிகா சந்திரமுகியில் நடித்தார். அந்த படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. மிகப்பெரிய வாய்ப்பை இழந்து விட்டோமே என்று கடுமையாக கவலைப்பட்டார் சிம்ரன்.
ஆனபோதும், நீண்ட இடைவேளைக்குப்பிறகு இப்போது மீண்டும் ரஜினியுடன் பேட்ட படத்தில் நடித்து விட்டார் சிம்ரன்.
இதுகுறித்து சிம்ரன் கூறுகையில், ரஜினி படத்தில் நடிக்க கிடைத்தும் தொடர முடியவில்லையே என்று அப்போது நான் ரொம்பவே வருந்தினேன். ஆனால் அதே ரஜினியுடன் இப்போது பேட்ட படத்தில் நடித்திருப்பது நான் விட்ட வாய்ப்பை மீண்டும் கைப்பற்றிவிட்டது போல் உள்ளது.
0 comments:
Post a Comment