வலி.வடக்கில் படையினர் வசமிருந்த 39 ஏக்கர் காணிகள் இன்று காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
தையிட்டி மற்றும் ஒட்டகப்புலம் பகுதிகளில் உள்ள காணிகளே மக்களின் மீள்குடியேற்றத்திற்காக விடுவிக்கப்பட்டுள்ளது.
குறித்த காணிகள் விடுவிப்புக்கான அறிவிப்பை நேற்று முல்லைத்தீவுக்கு பயணம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்திருந்தார்.
தையிட்டி வடக்கு, தெற்கு ஆகிய பகுதிகளில் 19 ஏக்கர் காணி விடுவிப்புக்கான சான்றிதழை காங்கேசன்துறை இராணுவ பொறுப்பதிகாரி வலி.வடக்கு பிரதேச செயலரிடம் கையளித்தார்.
இருப்பினும் ஒட்டகப் புலத்தில் விடுவிக்கப்பட்ட 20 ஏக்கர் காணிக்கான சான்றிதழ்கள் பிரதேச செயலரிடம் படைத்தரப்பால் தரப்பால் கையளிக்கப்படவில்லை.
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments:
Post a Comment