புலிகளினால் புதைக்கப்பட்ட பெருமளவான வெடிப்பொருட்கள் யாழில் மீட்பு!

மோட்டர் குண்டுகள் உள்ளிட்ட ஆபத்தான வெடிப்பொருட்களை யாழ்ப்பாணம் - அம்பன் பகுதியில் இருந்து மீட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் இன்று தெரிவித்துள்ளனர்.
பாகிஸ்தானில் தாயாரிக்கப்பட்டதாக கூறப்படும் 81 மி.மீ மோட்டார் குண்டுகள் மற்றும் அமுக்க குண்டுகள் என்பன சிறப்பு அதிரடிப் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய பருத்தித்துறை - அம்பன் பகுதியில் உள்ள பாழடைந்த காட்டுப்பகுதியில் இருந்தே இந்த வெடிப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமுக்க குண்டுகள் ஒவ்வொன்றும் 13 கிலோ பாரம் கொண்டவை என தெரிவிக்கப்படுகின்றது. மீட்கப்பட்ட வெடிப்பொருட்கள் விடுதலைப் புலிகளினால் புதைக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீதிமன்றின் அனுமதியுடன் குறித்த வெடிப்பொருட்களை செயலிழக்க செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக விசேட அதிரடிப்படையினர் கூறியுள்ளனர்.



Share on Google Plus

About Editor

எமது தளம் பற்றிய உங்கள் கருத்துக்கள் வரவேற்கத்தக்கது. உங்கள் கருத்துக்களை tamilnewsking@gmail.com என்ற மின்அஞ்சல் முகவரிக்க அனுப்பிவையுங்கள். நன்றி

0 comments:

Post a Comment