லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகர வளாகத்தில் புலம்பெயர் தமிழர்களுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் சமிக்ஞை செய்ததாக பிரிகேடியர் பிரியங்க பிரனாந்துவை ஐக்கிய ராஜ்யத்தின் வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றம் குற்றவாளியாக அறிவிததுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
டெமில் கார்டியன் உள்ளிட்ட தமிழ் இணையத்தளங்கள் போன்று புலம்பெயர் தமிழர்களுக்காக வழக்கைத் தாக்கல் செய்த பப்லிக் இன்ட்ரஸ்ட் லோ சென்டர் என்ற அரச சார்பற்ற அமைப்பு இதனை தெரிவித்துள்ளன.
அதனூடாக பிரிகேடியர் பிரித்தானியாவின் சட்டம் மற்றும் சமாதானத்தை பாதுகாக்க தவறியதாகக் குறிப்பிட்டு குறித்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பிரிகேடியர் பிரியங்க பிரனாந்துவிற்கு இந்நாட்டு வெளியுறவு அமைச்சின் ஊடாக அழைப்பாணை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகத் குறித்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் இராணுவ ஊடக பேச்சாளர் , பிரிகேடியர் சுமித் அதபத்து தெரிவித்ததாவது,
எந்தவித அழைப்பாணையும் எனக்கு கிடைக்கப்பெறவில்லை.
அதேபோல் , உத்தியோகபூர்வ கடமையில் ஈடுபட்டிருந்த அவரை எவ்விதத்திலும் பிரித்தானியா நீதிமன்றில் முன்னிறுத்த எதிர்ப்பார்க்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment