இந்திய அணியின் சகலதுறை ஆடக்காரர் அம்பத்தி ராயுடுக்கு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்துப் பரிமாற்றம் மேற்கொள்வதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக இடம்பெற்ற முதலாவது ஒருநாள் போட்டியின்போது அம்பத்தி ராயுடு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்டார். இதன்போது அவரது பந்து ஐ.சி.சி.யின் விதி முறைக்கு புறம்பாக இருப்பதாக நடுவர்கள் புகர் அளித்தனர்.
இதனை அடுத்து அவரது பந்து வீச்சை 14 நாட்களுக்குள் ஐ.சி.சி. அங்கீகாரம் பெற்ற பந்து வீச்சு பரிசோதனை மையத்தில் சோதனைக்கு உட்படுத்தும் படி ஐ.சி.சி. உத்தரவிட்டு இருந்தது.
ஆனால் அதன்படி ராயுடு தனது பந்து வீச்சை சோதனைக்கு உட்படுத்தவில்லை.
இதைத்தொடர்ந்து சர்வதேச கிரிக்கெட் போட்டியில் பந்து வீச அம்பத்தி ராயுடுக்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.
மேலும் ராயுடு பந்து வீச்சு சோதனைக்கு ஆஜராகி அதன் ஆய்வு அறிக்கை முடிவு தெரியும் வரை அவர் சர்வதேச போட்டியில் பந்து வீச முடியாது.
0 comments:
Post a Comment