யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் நான்கு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது இன்று அதிகாலை தமிழகத்தை சேர்ந்த நான்கு மீனவர்கள் படகொன்றில் நெடுந்தீவு கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போது, காங்கேசன்துறை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளதுடன், கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் வடக்கு மாகாண நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக காங்கேசன்துறை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment