மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் மூத்த விவசாயிகள் கௌரவிக்கப்பட்டுள்ளனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தின் ஏற்பாட்டில் உழவர் விழாவும், மூத்த விவசாயிகள் கௌரவிப்பும் இன்று மாந்தை மேற்கு பிரதேசச் செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.கேதீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.
இதன்போது தைப்பொங்கல் கொண்டாட்டம் இடம்பெற்றதோடு, மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவைச் சேர்ந்த மூத்த விவசாயிகள் 15 பேர் பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த நிகழ்வில் சர்வமதத் தலைவர்கள், அடம்பன் பொலிஸ் நிலைய அதிகாரி, மாந்தை மேற்கு பிரதேச செயலக பணியாளர்கள், விவசாயிகள், கிராம மக்கள் எனப் பலர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment