ஊஞ்சல் கயிறு கழுத்தை இறுக்கியதில் சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் கந்தப்பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பூப்பனை மேல்பிரிவு தோட்டத்தில் நடந்துள்ளது.
முத்து குமார் பவித்ரா (வயது-11 )என்ற சிறுமியே சாவடைந்துள்ளார்.
ஒரே வீட்டில் இருந்த மூன்று சிறுமிகள் அங்கிருந்த ஊஞ்சலில் ஆடி விளையாடியுள்ளனர்.
இதன் போது உயிரிழந்த சிறுமியை ஊஞ்சலில் அமரவைத்து அதன் கயிற்றை ஏனைய சிறுமிகள் ஆட்டியுள்ளனர்.
இதன் போது ஊஞ்சல் கயிறு சுற்றி சிறுமியின் கழுத்தை இறுக்கியுள்ளது.
சிறுமி மூச்சுத் திணறி உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
0 comments:
Post a Comment