இன்று ஆண்டின் முதலாவது பாராளுமன்ற அமர்வு!
இவ் ஆண்டுக்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரியவின் தலiமையில் இடம்பெறவுள்ளது.
இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி குறித்து இறுதித் தீர்மானம் சபாநாயகரினால் அறிவிக்கப்படவுள்ளதுடன், எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் ஆராயப்படவுள்ளது.
இதேவேளை இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல் குறித்து ஆராய நேற்றைய தினம் கட்சித் தலைவர்கள் கூட்டம் சபாநாயகர் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது இந்த வாரத்துக்கான நிகழ்ச்சி நிரல்களில் ஒரு சில மாற்றங்கள் செய்து கொள்ளப்பட்டன.
அதேபோல் எதிர்க்கட்சிகளுக்கான நிதியொதுக்கீடுகள் குறித்தும் நேற்றைய தினம் இடம்பெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டன.
0 comments:
Post a Comment