பிரித்தானிய இளவரசி மெர்க்கல் முதன்முறையாக மகப்பேறு ஆடை அணிந்து, மேற்கு லண்டனில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்திருந்துள்ளார். 37 வயதான பிரித்தானிய இளவரசி மெர்க்கல் தற்போது தன்னுடைய முதல் குழந்தையை வயிற்றில் சுமந்து வருகிறார் .
சமீப காலமாக இவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் கர்பிணிக்கான ஆடையை அணிவதில்லை என பலரும் விமர்சனம் செய்து வந்தனர்.இந்த நிலையில் மெர்க்கல் மேற்கு லண்டனில், வட கென்சிங்டன் பகுதியில் செயின்ட் சார்ள்ஸ் மருத்துவமனையில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கு வருகை தந்திருந்தார்.
அங்கு வேலையில்லாமல் இருக்கும் பெண்களுக்கு ஆடை பேஷன் பற்றிய குறிப்புகளை வழங்கினார். மேலும், நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும் பேசினார்.இந்த நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்த மெர்க்கல் பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஆஸ்கார் டி லா ரெண்டாவால் தயாரிக்கப்பட்ட £2,600 பவுண்டுகள் மதிப்புள்ள கோட் மற்றும் £179 பவுண்ட் மதிப்புள்ள ஆடையும் அணிந்து அனைவரின் கவனத்தையும் பெற்றார்.
0 comments:
Post a Comment