சூர்யா - ஹரி கூட்டணியில் இதுவரை ஆறு, வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 ஆகிய படங்கள் உருவாகியிருக்கிறது. அதையடுத்து சிங்கம் 4 உருவாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் இப்போது அவர்கள் ஆறாவது முறையாக இணையும் படத்திற்கு யானை என்ற டைட்டீல் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கிறது.
இப்படத்தை தமிழ் சினிமாவின் பழம்பெரும் தயாரிப்பு நிறுவனமான ஏவிஎம்., தயாரிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
என்ஜிகே படத்தை முடித்து விட்டு காப்பான் படத்தில் நடித்து வரும் சூர்யா, அதையடுத்து இறுதிச்சுற்று சுதா இயக்கும் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தை முடித்ததும் ஹரியுடன் இணைகிறார்.
சிங்கம் படத்தின் மூன்று பாகங்களிலும் போலீஸ் அதிகாரியாக நடித்த சூர்யா, இந்த யானை படத்திலும் காவல்துறை சம்பந்தப்பட்ட ஒரு அதிகாரியாகத்தான் நடிக்கிறாராம்.
ஆனால் இதற்கு முன்பு சூர்யா நடித்ததை விடவும் உயர் அதிகாரியாக இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்த யானை படமும் சிங்கம் படத்தைப்போன்று வெற்றி பெற்றால் இரண்டு, மூன்று பாகங்களாக வரும் என்கிறார்கள்.
0 comments:
Post a Comment