ரேசன் கடையில் கோதுமை தராத நிலையில் பசியால் பூச்சிக்கொல்லி மருந்து குடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில், மத்திய பிரதேசத்தில் ரத்லம் மாவட்டத்தில் வசித்து வரும் சிறுமி கடந்த டிசம்பர் 31ந்தேதி ரேசன் கடைக்கு சென்றுள்ளார். அவர் அங்கு தனக்கு கோதுமை வழங்கும்படி தொடர்ந்து கெஞ்சி கேட்டுள்ளார்.
ஆனால் அவருக்கு கோதுமை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் அதிக பசியால் இருந்த அந்த சிறுமி வேறு வழியின்றி பூச்சிக்கொல்லி மருந்தினை எடுத்து குடித்து உள்ளார்.
அதில் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர். அவரது உடல்நிலை அதிக மோசமடைந்து உள்ளது. இதனால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அந்த சிறுமியின் வயது விவரம் வெளியிடப்படவில்லை.
இதுபற்றி தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்த உள்ளது. இதற்காக குழு ஒன்றை அமைத்து உள்ளது.
0 comments:
Post a Comment